Header Ads



"சுதந்திரக் கட்சியின் தலையீட்டுடன், எமது தலைமையின் கீழ் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்''

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் மாநாடு  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இன்று (01) நடைபெற்றது.


ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு தொகுதி அமைப்பாளர்களை அழைப்பது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மாநாட்டின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
மீண்டும் உயிர் பெற்று முன்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார். 


கட்சிக்குள் நிலவும் பிளவுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க, 


''ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் எவ்வித பிளவும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். கட்சியின் மத்திய செயற்குழுவிற்கும் அதேபோன்று அனைத்து அமைப்பாளர்களுக்கும் நாளை அழைப்பு விடுத்துள்ளோம். சுதந்திரக் கட்சியின் உதவியுடனே எதிர்கால ஜனாதிபதி தீர்மானிக்கப்படுவார். சுதந்திரக் கட்சியின் தலையீட்டுடன், எமது தலைமையின் கீழ் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்''


என குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.