Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான அராஜகங்களை தீரத்துடன் எதிர்த்த, பள்ளிவாசலின் இமாமுக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு


கடந்த பத்தாண்டுகளாக மிருக பலத்துடன் கூடிய ஆட்சியாளர்களின் கொடூரச் சட்டங்களையும் அடக்குமுறைகளையும் முஸ்லிம்களுக்கு எதிரான அராஜகங்களையும் நாடாளுமன்றத்திற்கு வெளியே தீரத்துடன் எதிர்த்துக் குரல் கொடுத்தவர் மௌலானா முஹிப்புல்லாஹ் நத்வி.


இப்போது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் மக்களவையில் நத்வி அவர்களின் குரல் கம்பீரமாக ஒலிக்க இருக்கிறது.


ஆம்..


உ.பி. ராம்பூர் தொகுதியில்  சமாஜ் வாதி கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் மௌலானா முஹிப்புல்லாஹ் நத்வி அவர்கள்.


போட்டியிட்டது ராம்பூர் தொகுதியில் என்றாலும் இவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாய்ப் பணியாற்றியது டெல்லி பார்லிமெண்ட்  தெருவிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் தலைமை இமாமாக.


எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த மௌலானா அவர்கள் லக்னோவில் உள்ள நத்வத்துல் உலூம் மார்க்கக் கல்விக் கூடத்தில்  இறையியல் கல்வியில் பட்டம் பெற்றவர். 


ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.


ராம்பூரில் மௌலானா முஹிப்புல்லாஹ் நத்வி போட்டியிடுவதற்குப் பக்கபலமாக இருந்து ஆதரவு அளித்தவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ். 


அகிலேஷின் அன்பும் ஆதரவும் கண்டு மௌலானா நெகிழ்ந்து போயுள்ளார்.


“வெறுப்பரசியலைப் புறம்தள்ளி மக்களிடையே அன்பு, நல்லிணக்கம், ஒற்றுமை வளரவும், மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்கிறார் மௌலானா நத்வி அவர்கள்.


வாழ்த்துகள் மௌலானா அவர்களே.


இறையருளால் மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் தங்களைப் போன்ற மார்க்க அறிஞர்களின் எண்ணிக்கை மிகுதியாக வேண்டும்.

-சிராஜுல்ஹஸன்

No comments

Powered by Blogger.