Header Ads



பொத்துவில் அப்துல் மஜீத், வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி க்கு தாவினர்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் ஏற்பாட்டாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் முன்னாள் பிரதான அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று(04) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் இன்றைய தினம் அவர் நியமிக்கப்பட்டார்.


2

வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று(04) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இவர் வடமேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். வடமேல் மாகாண சபை கலைக்கப்படும் வரை அவர் முதலமைச்சராக பதவி வகித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.



No comments

Powered by Blogger.