15 அமைப்புக்கள், 210 நபர்களின் நிதிகள், சொத்துக்கள், பொருளாதார ஆதாரங்கள் முடக்கம்
நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.
15 அமைப்புக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 210 நபர்களின் அனைத்து நிதிகள், பிற நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார ஆதாரங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு தேசிய NTJ, ஜேஎம்ஐ உள்ளிட்ட 15 அமைப்புகளின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 113 பேரின் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன
Post a Comment