Header Ads



14 நிமிடங்களில் என்னவெல்லாம் சாதிக்க முடியும் தெரியுமா..?


🕰 தினமும் நீங்கள் உங்கள் சுயவிருத்தியை மேம்படுத்த 15 நிமிடங்களைச் செலவிட்டு வந்தால் வருட இறுதியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண்பீர்கள்.


🕰 பயனுள்ள ஒரு விஷயத்தில் தினமும் 15 நிமிடங்களை நீங்கள் செலவிட்டு வந்தால், குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காணபீர்கள். 


🕰 ஒரு மொழியை நீங்கள் கற்க தினமும் 15 நிமிடங்களை ஒதுக்கி வந்தால், வாரத்திற்கு ஒருமுறை மொழி கற்கை வகுப்புக்கு செல்வதை விட சிறந்த பலனை காண்பீர்கள். 


🕰 நீங்கள் தினமும் 15 நிமிடங்கள்  நடைப்பயிற்சி செய்து வந்தால், வாரத்தில் இரண்டு நாட்கள் கிளப்புக்குச் செல்வதை விட சிறந்த பலனைக் காண்பீர்கள்.


🕰 தினமும் நீங்கள் 15 நிமிடம் அறிவுக்கு விருந்தாகும் புத்தகங்களை வாசித்து வந்தால், உங்கள் அறிவில் சிறந்த மேம்பாட்டை காண்பீர்கள். 


🕰 தினமும் நீங்கள் 15 நிமிடங்கள் பயனுள்ள ஒரு தகவலை எழுத  ஒதுக்கி வந்தால், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு கட்டுரையை உங்களால் எழுத முடியும், மேலும் நீங்கள் வருட இறுதியில் ஒரு புதிய புத்தகம் எழுதிய சாதனை படைப்பீர்கள். 


🕰 தினமும் நீங்கள் 15 நிமிடங்கள் புனித அல்குர்ஆனை ஓதுவதற்கு ஒதுக்கிவந்தால், ஒரு மாதத்திற்குள் முழு குர்ஆனையும் ஒதி முடித்து விடலாம்.


🕰 தினமும் நீங்கள் 15 நிமிடங்கள் படைத்த இறைவனை நினைவு கூறி, துதி பாடி வந்தால், சொத்து சுகங்களும் பிள்ளை குட்டிகளும் பயனளிக்காத நாளில் , உங்கள் தராசுத்தட்டில் மகத்தான பயன்களை காண்பீர்கள். 


🕰 அறச்செயல்களில் சிறந்தது, குறைந்ததாக இருந்தாலும் தொடர்ந்து செய்யப்படக் கூடியதாகும். 


🕰 15 நிமிட தத்துவத்தின் தனிச்சிறப்பு யாதெனில், அதை செயல்படுத்த நேரமில்லை என்று யாருக்கும் சாக்குப்போக்கு சொல்ல முடியாமல் இருப்பதாகும். 


🕰 அருளாளன் அல்லாஹ் எங்களதும் உங்களதும் கால நேரங்களை அறங்களாலும் சுகங்களாலும் நிரப்பமாக்குவானாக!


✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.