Header Ads



1,208 கிலோ போதைப் பொருட்கள் இன்று அழிக்கப்படுகிறது


நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள 1,208 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை அழிக்க இன்றைய தினம் (29) நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


வனாத்தவில்லுவ லெக்டொஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அதிசக்தி வாய்ந்த போதைப்பொருள் எரியூட்டியை பயன்படுத்தி இவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தலைமையகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


இதன்போது, 614 கிலோ 36 கிராம் ஐஸ் போதைப்பொருள், 13 கிலோ 686 கிராம் ஹெரோயின், 581 கிலோ 34 கிராம் கெட்டமைன் போதைப்பொருள் அழிக்கப்பட உள்ளன.


இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் இந்த போதைப்பொருள் கையகப்படுத்தப்படவுள்ளதுடன், 9.30 மணியளவில் வனாத்தவில்துவ லெக்டொஸ் தோட்டத்தில் அதிசக்தி வாய்ந்த போதைப்பொருள் எரியூட்டி மூலம் அழிக்கப்படவுள்ளது.


புத்தளம் நீதவான், அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதிகள், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் இடம்பெற்றவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.