இருட்டு அறையில் சிறை, கொல்லப்பட்டாரா கொத்தலாவல..? - 11 ஆம் திகதி முக்கிய தீர்ப்பு
கொத்தலாவலவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை கடந்த மே மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதலில் மே 28ஆம் திகதியன்று, அவரின் மரணத்துக்கான காரணம் அறிவிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தபோதும், அது ஜூன் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி தொழிலதிபர் லலித் கொத்தலாவல 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி தனது 84 ஆவது வயதில் காலமானார்.
எனினும் அவரது மறைவைத் தொடர்ந்து, கொத்தலாவலவின் மனைவியான 84 வயதான செரின் விஜேரத்னவின் மூத்த சகோதரி, லலித் கொத்தாவலயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்தார்.
கொத்தலாவல வேண்டுமென்றே காயப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் இருட்டு அறையில் ஒரு குழுவால் சிறை வைக்கப்பட்டிருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொத்தலாவலவை வற்புறுத்தி, பெறுமதிமிக்க சொத்துக்களை தமது பெயர்களுக்கு பொலிஸாரின் முன்னாள் அதிகாரிகளை கொண்ட குழுவால் மாற்றியமைத்தது பற்றி அவர் விளக்கமளித்துள்ளார்.
அருகில் தெரிவுகள் இருந்தும் கொத்தலாவல ஒரு குறிப்பிட்ட வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டமைக்கான காரணம் குறித்து மனுதாரரான விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
செலிங்கோ கொன்சோலிடேட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், செலான் வங்கியின் ஸ்தாபக தலைவருமான லலித் கொத்தலாவல இறக்கும் போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது
அவர் இலங்கையின் மூன்றாவது பிரதமரான சேர் ஜோன் கொத்தலாவலவின் மருமகனாவார்.
Post a Comment