வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, வீடுகளை துப்பரவு செய்ய 10,000 ரூபாய்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் இன்று (07) மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அதற்கு கிராம அதிகாரியின் சான்றிதழ் அவசியம் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
"வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்ய, தலா, 10,000 ரூபாய் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைப் பெற, கிராம அலுவலர் சான்றிதழ் மற்றும் அது தொடர்பான பரிந்துரைகள் அவசியம்." என தெரிவித்தார்.
சீரற்ற வானிலை காரணமாக கடந்த முதலாம் திகதி முதல் 113 பிரதேச செயலகப் பிரிவுகளின் அதாவது 13 மாவட்டங்களின் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் 239,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment