Header Ads



உலகப் பணக்காரனை சந்தித்தார் ரணில் - இலங்கையில் Starlink ஐ அமுல்படுத்துவது குறித்து பேச்சு


இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலதிபர் எலோன் மஸ்க்கைச் சந்தித்து Starlink ஐ இலங்கையில் அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


Starlink என்பது தொலைதூர இடங்களுக்கு குறைந்த விலையில் இணையத்தை வழங்குவதற்காக தனியார் விண்வெளிப் பயண நிறுவனமான SpaceX ஆல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் வலையமைப்பு ஆகும்.


ஜனாதிபதியின் காலநிலை விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் எலோன் மஸ்க் உடனான ஜனாதிபதியின் சந்திப்பில் கலந்துகொண்டார்.


No comments

Powered by Blogger.