Header Ads



Mp க்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் - ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம்


இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பினால் இன்று -15- முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரத்தை மீள வழங்குவதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


போராட்டம் தொடங்கிய உடனேயே பொலிஸார் பதாகைகளை அகற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில முனசிங்கவிடம் மனு ஒன்றைக் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.