டயானா பதவி நீக்கம் - முஜிபுர் ரகுமான் Mp ஆகுவாரா..?
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கான சட்டப்பூர்வ தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இன்று (08) அறிவித்துள்ளது.
டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச டயானா பதவி நீக்கப்படுமிடத்து அப்பதவியை முஜிபுர் ரகுமானுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கியிருந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment