Header Ads



JVP வசமிருந்த 900 கோடி ரூபாய் இப்போது எங்கே..?


தேசிய மக்கள் சக்தியானது மே தினச் செலவை அப்பாவித் தொழிலாளர் மீது சுமத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றஞ்சாட்டினார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி கொழும்பு, செத்தம் வீதியில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு தேசிய மக்கள் சக்தி விற்பனை செய்ததாக கூறப்படும் டிக்கெட்டையும் அவர் காட்டினார்.


“இந்தச் டிக்கெட் எனக்கு அலவ்வ சென்ட்ரல் ஆசிரியர் ஒருவரே கொடுத்தார். தற்பெருமை பேசும் அனுர திஸாநாயக்கவின் சக்தி இது. எனது கையில் இருக்கும் இந்த டிக்கெட், மே தினத்தை கொண்டாடுவதற்காக ஒவ்வொரு கிராமத்தின் தொழிலாளர்களிடம் விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டுள்ளது.


"மே தினத்தை நடத்த இப்படி பிச்சை எடுப்பவர்கள் எப்படி நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்? கட்சி நிதியில் உள்ள 900 கோடி ரூபாய் இப்போது எங்கே"? என்றார்.

No comments

Powered by Blogger.