எகிப்தில் கத்தார், ஹமாஸ் தூதுக் குழுக்கள் - மனிதப் பேரழிவைத் தடுக்க தீவிர முயற்சி
காசாவில் போர்நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, கத்தார் தூதுக்குழு ஒன்று சனிக்கிழமை கெய்ரோ செல்கிறது என்று அல் ஜசீரா அரபு சேனல் தெரிவித்துள்ளது.
ஏழு மாதப் போரினால் இடம்பெயர்ந்த 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கான கடைசி புகலிடமான ரஃபாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதைத் தடுக்க இராஜதந்திர முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் தூதுக்குழுவும் எகிப்திய தலைநகரில் வரவுள்ளது.
ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் இராணுவத் தாக்குதலை ஆரம்பித்ததில் இருந்து 34,500க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Post a Comment