Header Ads



ஏவுகணையால் ரைசியின், ஹெலிகொப்படர் வீழ்த்தப்பட்டதா..?


ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி  சென்ற ஹெலிகொப்படர் விபத்துக்குள்ளான நிலையில் அவரும் அவருடன் பயணித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் உட்பட முக்கியமானவர்கள் உயிரிழந்தனர்.


இந்த நிலையில், ஈரான்அதிபர் கலாநிதி இப்ராகிம் ரைசி பயணித்த பெல் 212 ரக ஹெலிகொப்டர் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியதை அடுத்து பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ஆனால், அந்த 2 ஹெலிகாப்டர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியுள்ளன.


ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் மலையில் மோதியுள்ளது. இதனால் இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என கேள்வி எழுந்துள்ளது.


இதன் காரணமாக விபத்து தொடர்பில் ஈரான் பாதுகாப்பு படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


ஏவுகணைத் தாக்குதலால் ஹெலிகொப்டர் முற்றாக எரிந்து அழிந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


No comments

Powered by Blogger.