Header Ads



சலாஹூத்தீனின் வரலாற்றை மீள எழுதுகிறது ஹமாஸ்


எந்தப்படையும் அவர்களை வீழ்த்த முடியாது.


எனது சமூகத்தில் உலக முடியும் மட்டும் ஒரு கூட்டம் சத்தியத்திற்காக போராடுவார்கள், அவர்கள் எங்கு உள்ளனர் என நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ உள்ள பூமியில் உள்ளனர் என நபியவர்கள் பதில் அளித்தார்கள் .


ரபாவில் இஸ்ரேலிய இராணுவத்துடன ் மிகவும் உக்கிரமாக அல் கஸ்ஸாமும் ஏனைய பலஸ்தீன போராளிகளும் போராடுகின்றனர்.


சில யூடிபர்கள் குறிப்பிடுவது போன்று இஸ்ரேலின் கரம் ஓங்கவில்லை .இராணுவ ரீதியாக இஸ்ரேல் ஒவ்வொரு நிமிடமும் தோல்வி அடைகிறது.அந்த அளவிற்கு இராணுவ போராட்டம் கச்சிதமாக திட்டமுடப்பட்டுள்ளது.ரபா கூடார தாக்குதல் சொல்லும் மிகப் பெரிய செய்தி இஸ்ரேல் சமனிலை இழந்துள்ளது.


சலாஹூத்தின் அய்யூபி (ரஹ்) பலஸ்தீன மீட்க போராடிய பொது மொத்த ஐரோப்பாவும் அவரது படைக்கு எதிராக அணி திரண்டது .ஆனால் சலாஹூத்தீன் ரஹ்) மொத்த ஐரோப்பாவையும் இராணுவ ரீதியாக தோற்கடிடித்தார்.


ஹமாஸ் அதே நிபந்தனையை எதிர் கொள்கிறது .சலாஹூத்தூனின் காலத்தில் ஐரோப்பிய இராணுவம் 70000 முஸ்லிம்களை மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் கொலை செய்து இரத்த ஆற்றை ஒட்டியது. அதேபோல் தோல்வு அடையும் இஸ்ரேலிய இராணுவம் ரபாவில் பொது மக்களை கொலை செய்கிறது.


இன்று அல்லாஹ் சலாஹூத்தீனின் அதே வரலாற்றை ஹமாஸ் மீள எழுதுகிறது .அல் கஸ்ஸாம் யாருடன் போராடுகிறது.இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இராணுவ வல்லரசுடன் போராடுகிறது .போராட்டம் கடுமையானது ,வேதனை மிக்கது.இரத்த ஆறு ஓடும் ஆனால் நபியவர்களின் வார்த்தை பிழையாகது .உலகில் எந்த சக்தியாலும் அவர்களை ஒன்றும் செய்து விட முடியாது .


சில அறபு ஊடகங்கள் மிக மோசமாக நடந்து கொள்கிறது .அவர்களுக்கு எப்படியாவது ஹமாஸ் தோற்க வேண்டும் இஹ்வானகள் மீது பலி போட வேண்டும்.


அல் கஸ்ஸாம் போராடும் முறை அவர்கள் அதனை வெளிப்படுத்தும் முறை எல்லாம் சொல்வது. அவர்கள் பூரண ஆயத்துடன் போரில்இறங்கி உள்ளனர்.அல் அரபியாவின் பதற்றம்.போலியானது .எர்தொகனின் வார்த்தையிலும் உண்மை இல்லை ஆனால் அல்லாஹ்வின் தூதரின் வார்த்தை ஒரு போதும் பிழையாகாது.


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 3:200. 


முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!


எம்.என் முஹம்மத் .

No comments

Powered by Blogger.