சில வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்க தீர்மானம்
இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளில் சில வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வினாத்தாளின் சில பல்தேர்வு வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குளறுபடிகள் காணப்படும் வினாக்களுக்கு மாத்திரம் இவ்வாறு இலவசப் புள்ளிகள் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளில் சிக்கல் நிலை காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வௌியாகியிருந்தன.
விஞ்ஞானப் பாடத்திற்கான வினாத்தாளில் காணப்படும் சில வினாக்கள் கட்டாய கற்றலுக்கான உள்ளடக்கங்களுக்கு அப்பால் காணப்படும் விடயங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில இலவசப் புள்ளிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment