Header Ads



ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் அவன்தான்


பெண்கள்,, பிள்ளைகளை பிரசவிக்கும் போது, ​​சதையினாலான ஒரு வட்டு குழந்தைகளுடன் வெளிவருவதை பார்த்திருப்பீர்கள். அதை நாம் கொப்பூழ்க்கொடி என அழைப்போம். 


இந்த (கொப்பூழ்க்கொடி) தாயின் வயிற்றில் இருக்கும் போது தாயின் இரத்தமும், சிசுவின் இரத்தமும் ஒன்றாக வந்து கலக்கா வண்ணம் பாதுகாப்புப் பணியில் இருக்கும்.


அதிலே ஒரு மென்சவ்வு இருக்கும், அதனை மருத்துவர்கள் "சென்ஸிபல் சவ்வு" என்று அழைப்பார்கள், ஏனெனில் அது கற்பனைக்கு அப்பாற்பட்ட மருத்துவப் பணிகளை விவேகமாக செய்து கொண்டிருக்கும். 


இந்த சவ்வு தாயின் இரத்தத்தில் இருந்து ஆக்ஸிஜன், சர்க்கரை மற்றும் இன்சுலின் ஆகியவற்றை எடுத்து அவற்றை சிசுவின் இரத்தத்தில் செலுத்துகிறது.


மேலும் அது தாயிடம் காணப்படும் நோயெதிர்ப்பு சக்திகளை அவளது இரத்தத்தில் இருந்து எடுத்து அவற்றை சிசுவின் இரத்தத்தில் செலுத்தும்.


இந்த சவ்வு சிசுவுக்கு ஒரு சுகாதார பாதுகாப்பு அரணாகவே செயல்படுகிறது. தாய் ஏதாவது நச்சுப் பொருட்களை உட்கொண்டால், அல்லது உணவு நஞ்சானால் கூட இந்த சென்ஸிபல் சவ்வு மூலம் நச்சு கலந்து இரத்தம் சிசுவுக்கு கடத்தப்படுவதில்லை, ஏனெனில் சிசுவுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் எவை? தேவையற்றவைகள் எவை? என்பதை இந்த சென்ஸிபல் சவ்வு நன்கு அறிந்து வைத்திருக்கும்.


அதாவது இந்த சவ்வு அதி திறமையான ஒரு மருத்துவர் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கும். இல்லை தேர்ச்சி பெற்ற ஒரு மருத்துவ குழுவிடம் இந்த சவ்வின் பணியை ஒப்படைத்தால் கூட சிசு தாக்குப்பிடிக்கமால் இறந்துவிடும்.


கர்ப்ப காலத்தில் ஆரம்ப மாதங்களில் தாய்மார்கள் விதம்விதமான உணவுகளுக்காக ஏங்குவார்கள். அவைகள் உண்மையில் தாய் ஆசைப்படும் உணவுகளல்ல. மாறாக வயிற்றில் இருக்கும் சிசு ஆசைப்படும் 


ஊட்டச்சத்துக்கள். இந்த சென்ஸிபல் சவ்வுதான் சிசுவின் தேவைகளை பார்த்துப் பார்த்து தாயின் மூளைக்கு தகவல்களை வழங்குகிறது.


((ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் அவன்தான்))


📖 அல்குர்ஆன்: 20 / 50

✍ தமிழாக்கம் /  imran farook

No comments

Powered by Blogger.