அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்கிறேன் - மலைக்கச் செய்யும் தகவல்
அவரும் பழம் என்ன விலை? என்று கேட்க,
வியாபாரி வாழைப்பழம் கிலோ 5 ரூபாய் ஆப்பிள் கிலோ 10 ரூபாய் என்று சொன்னார்.
அதைக் கேட்டதும் அந்தப் பெண்மணி அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் தன்னிடம் விலை அதிகமாக சொல்லிவிட்டாரே என கோபப்பட்டு வியாபாரிடம் பேசத் தொடங்கினார்.
'எதுவும் பேசவேண்டாம்' என கண்களால் வியாபாரி சைகை செய்தார்.
அந்தப் பெண்மணி தன்னிடமிருந்த தொகையைக் கொடுத்து பழங்களைப் பெற்றுக்கொண்டு அல்லாஹ்வுக்கே நன்றி என்னுடைய குடும்பத்திற்கு இது போதுமானதாக இருக்கும் என்று சொல்லிய வண்ணம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்
அப்பெண்மணி சென்ற பின்னர், வியாபாரி அந்த மனிதனைப் பார்த்து:
சகோதரரே கோபித்துக் கொள்ளாதீர் உங்களை ஏமாற்ற வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல நான் அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்கிறேன்
அந்தப் பெண்மணி தனக்குக் கிடைக்கும்சொற்ப வருமானத்தை, வைத்து ஆதரவற்ற நான்கு குழந்தைகளை பராமரித்து வருகிறார்.
அவர் யாரிடத்திலும் உதவி கேட்க விரும்பவில்லை நானும் பலமுறை அவருக்கு உதவி செய்ய விரும்பினேன் ஆனாலும் அவர் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை, எனவே நான் யோசனை செய்து அவரின் தன்மானத்திற்கு ஊறுவிளைவிக்காமல் மறைமுகமாக அவருக்கு உதவ நான்கு மடங்கு விலையைக் குறைத்து விற்பனை செய்கிறேன் "என்றவர்,
#வணக்கத்திற்குறிய அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன், இந்த பெண்மணி வாரத்துக்கு ஒருமுறைதான் என்னிடத்தில் வியாபாரம் செய்வார் ஆனால் அவர் என்னிடம், வியாபாரம் செய்யும் நாட்களில் எனக்கு நான்கு மடங்கு லாபம் கிடைக்கும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்" என்றார்
இதைக் கேட்ட அந்த மனிதரின் கண்களில் இருந்து, நீர் தாரைத் தாரையாக வழிந்தது அந்த வியாபாரியின தலையில் முத்தமிட்டார்,
#பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள் வானத்தில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள்மீது கருணை காட்டுவான் என்பது நபிமொழி.
//உண்மையில் பிரதிபலனை எதிர்பாராமல் அல்லாஹ்விற்காக ஒருவரின் தேவைகளை நிறைவேற்றும் போது உள்ளத்தில் ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
அனுபவித்தவர்களால்தான் உணர முடியும்.//
நிகழ்வைப் படிக்கின்ற சகோதர்களே! தேவையுடையவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத வகையில், நீங்கள் உதவி செய்து பாருங்கள் அப்பொழுது அவர்கள் முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி உங்கள் உள்ளத்திலும் ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக நீங்கள் உணர்வீர்கள்.
-அரபியிலிருந்து தமிழில்-
இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ
Post a Comment