Header Ads



ரைசியின் மரணத்தை விரும்பிய, அமெரிக்க அரசியல் வாதிகள்


ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் சக் ஷுமர், 


"அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுடனான தனது உரையாடல்கள் இந்த கட்டத்தில் தவறான விளையாட்டுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகின்றன. ஆனால் நிலைமையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பேன்" என்றார். "ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வடமேற்கு ரானில் மிகவும் மோசமான பனிமூட்டம் நிலவியது. இது ஒரு விபத்து போல் தெரிகிறது. எனினும் அதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்படுகிறது," என்று அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில் குறிப்பிட்டார்.


நாடாளுமன்ற அவையின் ஆயுதப்படை சேவை கமிட்டிக்கான குடியரசுக் கட்சி தலைவரான மைக்கேல் வால்ட்ஸ் "இது நல்லதே" என்று கூறியுள்ளார்.


"ரைசி அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தவர்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார். 


"ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக திகழும்" என்று புளோரிடாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிக் ஸ்காட் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.


"அவர் மறைந்து விட்டால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க இரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.


BBC

1 comment:

  1. இறைநிராகரிப்பாளனுக்கு ஒரு இறையடியான், பயங்கரவாதியாகவும், குழப்பக்காரனாகவும் தான் தென்படுவான். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பிர்ஔன் மூஸா(அலை) அவர்களைப் பற்றி கூறிய செய்தியும் அதுதான், அல்லாஹ்வுடைய தூதை சுமந்து கொண்டு மூஸா(அலை) அவர்கள் பிர்ஔன் அரசனிடம் சென்று அல்லாஹ்வின் தூரை எத்திவைத்து அநியாயம், அக்கிரமத்திலிருந்து பனூஇஸ்ரவேலர்களைக் காப்பாற்றுமாறு கூறிய போது பிர்ஔன் மூஸா(அலை)அவர்களைப் பார்த்து 'உமது இறைவன் பற்றி எனக்குச் சந்தேகம் இருக்கின்றது. எமது மக்களைப்பிரித்து அவர்களுக்கு மத்தியில் கு​ழப்பத்தை ஏற்படுத்தவே இவர் வந்திருக்கின்றார் எனக் கூறினான். ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹீம் ரஈஸி அவர்கள் மிகவும் பெரிய அறிஞர். ஒரு விஞ்ஞானி, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனுக்கு பயந்த ஒரு அடியான். ஈரான் நாட்டின் பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பத்தை பிரயோகித்து வசதி குறைந்த நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் உதவி செய்வோம். அந்த அடிப்படையிலேயே 514மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உமா ஓயா நீர்ப்பாசன, மின்உற்பத்தித் திட்டத்தை சென்ற 24 ஏப்ரல் 2024 அன்று இலங்கை சனாதிபதியுடன் ஆரம்பித்து வைத்தார். அந்த தி்ட்டத்துக்கு தொழில்நுட்ப உதவி அனைத்தும் ஈரானுடையதாகும். இது போன்ற நீர்ப்பாசனத் திட்டங்கள் உலகம் முழுவதும் 34 ஏற்கனவே ஆரம்பித்து வைத்துள்ளது. அந்த வகையில் இறுதியாக ஆஸர்பைஜான் நாட்டின் நீர்ப்பானத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டுத் திரும்பும் வழியில் அன்னாருக்கு இந்த விபத்து ஏற்பட்டு ஷஹீதாகியிருக்கின்றார். அன்னாருடைய ஆன்மாவைச் சாந்தியாக்கி அன்னாருக்கும் அன்னாருடன் பயணித்த அனைவருக்கும் ஜன்னாதுல் பிர்தவ்ஸ் சுவனத்தை அல்லாஹ் வழங்கிவைக்க நாம் அனைவரும் அல்லாஹ்வை இரு கரமேந்தி பிரார்த்தனை செய்கின்றோம். அதே நேரத்தில் புளோரிடாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிக் ஸ்காட் என்ற இறை நிராகரிப்பானனின் கருத்துக்களை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு இறையச்சமும் இறைநிராகரிப்பும் நிச்சியமாக ஒன்று உலகில் ஒருபோதும் ஒன்று சேரமாட்டாது என்பதையும் ஆணித்தரமாகக் கூறிவைக்க விரும்புகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.