Header Ads



ரஷ்ய போர்க்களம் சென்ற இலங்கையரின் துயரம் - மனைவியும் உலகை விட்டுச் சென்றாள்


ரஷ்ய மனித கடத்தலில் சிக்கி கடும் சிரமத்திற்கு ஆளான நபர் ஒருவர் குறித்த செய்தி குருநாகல் - கும்புக்கெட்ட பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.


அவர் பெயர் எரந்த சிந்தக தென்னகோன், போர்க்களத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கடந்த 9ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.


ரஷ்யாவில் வேறொரு வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் ரஷ்ய கூலிப்படையில் இணைந்து போர்க்களத்தில் தலையில் துப்பாக்கிச் சூடு பட்டதாக அவர் அத தெரணவிடம் தெரிவித்தார்.


இரண்டு நாட்களுக்கு முன்னர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.


ரஷ்ய போர்க்களத்தில் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எரந்த வைத்தியசாலையில் இருந்து தப்பித்து நண்பர் ஊடாக இலங்கை வந்துள்ளார்.


ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்டுவதற்காக எரந்த, ரஷ்ய கூலிப்படையில் சேர்ந்தாலும், அவர் நாடு திரும்புவதற்கு முன்பே அவரது மனைவி கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.