ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு - ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமமைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து குறித்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரதமர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்றும் அவர் ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள நகரமான பான்ஸ்கா பைஸ்ட்ரிகாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலர் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.
Post a Comment