இஸ்ரேலின் கொடூர செயலை, கண்டிக்கிறது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு
இஸ்ரேலிய தாக்குதலை பாலஸ்த்தீன குடிமக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் கொடூரமான செயல் என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
அந்த அமைப்பு தனது அறிக்கையில்,
இந்த தாக்குதலை "போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் அரச ஆதரவு பயங்கரவாதம்" என்று குறிப்பிட்டுள்ளது.
"இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
Post a Comment