Header Ads



தூக்கி நிறுத்திய ஒரே தலைவர், ரணில் மட்டுமே - நசீர் அஹமட்


மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது, தேர்தலை பிற்போட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழர் விடுதலைக் கூட்டணியும் சேர்ந்து தேர்தலை பிற்போடுமாறு வாக்களித்துவிட்டு, இன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையாகவுள்ள என்று வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தெரிவித்தார்.


அமைச்சர்கள், மற்றும் திணைக்கள தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட வடமேல் மாகாண சபையின் பிரதம செயலாளர்களின் பங்களிப்புடன் வடமேல் மாகாணத்தில் எதிர்கால திட்டங்கள் அபிவிருத்திபற்றி புதிய ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது.


இதன்போது தற்போதைய தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன அவர்களும் கலந்து கொண்டதுடன் ஆளுநர் நசீர் அஹமட் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது,


வடமேல் மாகாணத்தில் சுற்றுலாத்துறை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. அதனை மேம்படுத்தவும் வடமேல் மாகாணத்தில் புதிய முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தாம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும், எதிர்காலத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள தம்பதெனிய போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாகவும், நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்த போது அதனை தூக்கி நிறுத்திய ஒரே ஒரு தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மட்டுமே என்றும் தெரிவித்தார்.


அத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவிடாமல் அதனை பிற்போடுவதற்கு (2017.10.20) தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து தேர்தலை பிற்போடுவதற்கு வாக்களித்த பெரும்பாண்மையை ஏற்படுத்தி, தடுத்து அன்று எவ்வாறு மாகாண சபைத் தேர்தலை பிற்போடாமல் இருந்திருந்தால் தான் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் கிழக்கின் அபிவிருத்திக்காக முதலீட்டாளர்கள் கொண்டு வந்த 5 பில்லியன் டொலரை முதலீடு செய்வதற்கு தான் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படாமல் இருந்திருந்தால் தான் இரண்டாவது தடவையாக முதலமைச்சராகி தனது கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப் படுத்தியிருப்பதாகவும், அன்று தமிழர் விடுதலைக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் சேர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்த விடாமல் அதற்கு எதிராக வாக்களித்து இன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுவது வேடிக்கையாகவே உள்ளது என்றும் கூறினார்.


மேலும் தான் கட்சி, இன, மத பாகுபாடு இன்றி எல்லோருக்கும் தனது சேவையை; தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.