இனவாதத்தைக் கக்கி வாக்குகளை பெற்றுக் கொள்வர், அந்த விடயத்தில் முஸ்லிம்கள் அமைதி காப்பார்கள்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தினம் கடந்த 09.05.2024 கொழும்பு 7 ல் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் மண்டபத்தில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் Artificial Intelligence, Disinformation deep fake and Democracy எனும் தலைப்பில் அதிதிகளின் பேச்சுக்கள் இடம் பெற்றன.
இங்கு கலாநிதி ரங்கன கலன்சூரிய, ஜனாதிபதி சட்டத்தரனி, எம்.எம்.சுகைர், ஜனாதிபதி சட்டத்தரனி சாலிய பீரிஸ், சிரேஸ்ட சட்டத்தரனி என்.எம். .சஹீட் ஆகியோர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பக்கீர் மாக்கார், முஜிபு ரஹ்மான், லிபியா, பலஸ்தீன்,துாதுவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய கலாநிதி ரங்கன கலன்சூரிய .......
கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு பாரிய சோதனைகள் மிகுந்த காலமாக இருந்துவந்தது. பல்வேறு தலைப்புகளில் முஸ்லிம்களைத் இன .மத இருப்பிடங்களைத் தாக்கினார்கள். வந்துக் கொத்து, வந்த யங்கி, சாபி சாபீடீன், ஹலால் போன்ற பல்வேறு நிகழ்ச்சி நிரலில் இதனை மேற்கொண்டார்கள். ஒவ்வொரு முறை வரும் தேர்தல் காலத்திலும் இவ்வாறுதான் இனவாதத்தைக் கக்கி பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்வார்கள்.. அந்த விடயத்தில் முஸ்லிம் அமைதி காத்து கொள்வார்கள்.
அதே போன்று தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச காலத்தில் முஸ்லிம் கொவிட் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடம்புகளை எரித்தார்கள். இதற்கு எதிராக சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் யு டியுப்பில் ஒரு பதிவை ஏற்றியதற்காக அவரை பொலிஸார் சிறையில் அடைத்தார்கள். அவர் இன்றும் அதற்கான வழக்கில் ஆஜராகி வருகின்றார் அதே ஜனாதிபதி சிறிது காலத்திற்குப் பின்னர் எரிப்பதை தடுத்து ஜனசாக்களை அடக்கம் செய்வதற்கு தீர்மாணம் எடுத்தார். இவ்வாறானவர்கள் தான் அரகலை மக்கள் போரட்டம் ஊடாக நாட்டை விட்டு விரட்டி அடித்தார்கள் .......அந்த விடயத்தில் தற்போதைய ஜனாதிபதி 2 அரை வருடங்கள் நாட்டை விட்டு ஓடாமல் ஜனாதிபதியாக இருந்து வருகின்றார்.
இந்த நாட்டில் தேர்தல்களில் பழைய முறைப்படி பிரச்சாரத்திற்காக கொழும்புக்கு பஸ்களில் சனங்களை ஏற்றி கூட்டம் வைப்பது, போஸ்டர் அல்லது பத்திரிகை விளம்பரப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வதில்லை தற்போதைய டிஜிட்டல் முறையில் இந்த முறை மாற்றம் மடைந்துள்ளது
இவற்றுக்கு உதாரணம் கடந்த காலத்தில் சிறையில் இருந்து கொண்டு பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
டிக் டொக் சமூக சேவை ஊடாக கோடிக்கணக்கான மக்களுக்கு தனது கருத்துக்களை அனுப்பினார். அதே போன்று தான் இந்தியாவின் பிரதமர் மோடி அவர்களும் சமூக சேவை ஊடாக தேர்தல் பிரச்சாரங்களை தேர்தலில் பிரச்சாரங்கள் மேற்கொள்கின்றார் அந்த அளவுக்கு தற்பொழுது மக்களிடம் சிறிய செய்திகள் ஒரு வசனம் கொண்ட கருத்து மட்டுமே மக்களை வெகு விரைவாக சென்றடைகின்றன அதனால் அவர்கள் மனசுகள் கவரப்பட்டு வருகின்றன.
ஆசியாவில் இந்தியா நாடு முதல் தர நாடாகவும் இந்தோனிசியா இரண்டாம் தர நாடாகவும் உலகில் முன்னேறி வருகின்றனர் இதற்காக மேலைத்தேய நாடுகள் இந் நாடுகளுக்கு எதிராக பேசவில்லை இந்தியாவின் தொழில்நுட்ப யுகத்தில் சகல நாடுகளிலும் முதலிட்டு உள்ளது. அந்நாடுகளில் அவர்கள் பாரிய பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக உள்ளதாகவும் கலாநிதி கலன்சூரிய அங்கு உரையாற்றினார்கள்.
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment