நான் கண்டிப்பாக அரசியலுக்கு வந்து, நாடாளுமன்றத்திற்கும் வருவேன் - எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன்
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே இன்று (09) விசேட ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய டயானா கமகே, இந்நாட்டின் பாராளுமன்றத்தில் அமரக்கூடிய சட்டத் தகைமை எதுவும் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த டயானா கமகே,
"எனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது. வெகு காலத்திற்குள் இந்த பாராளுமன்றம் கலைக்கப்படும். எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். ரணில் விக்கிரமசிங்க மற்றவர்கள் மறைந்திருந்த போது இந்த நாட்டைக் கைப்பற்றினார். நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவேன்" என்றார்.
Post a Comment