Header Ads



தேர்தல் வந்தால் பயங்கரவாதத்தின் பேரில், ஆட்கள் கைது செய்யப்படுவார்கள் - ரவூப் ஹக்கீம்


- இக்பால் அலி -


தேர்தல்  வந்தால் காளான்கள் முளைப்பது போன்று எங்காவது ஒரு பக்கத்தில் நாட்டில் பயங்கரவாதத்தின் பேரில் கைது செய்யப்படுவார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு


அக்குறணை ஐடெக் கல்வி நிலையம், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இணைந்து நடத்திய எழுத்தாளர், ஐடிஎன் வசந்தம் செய்தி ஊடகவியலாளர் கவிஞர் இக்பால் அலி எழுதிய காலத்தின் கால்கள் (திறன்நோக்கு கட்டுரைத்தொகுதி) குரங்குத் தம்பி (சிறுவர் பாடல்கள் ) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா ;) அக்குறணை ஐடெக் கல்வி நிலைய மண்டபத்தில் இயக்குனர் ஐ. ஐனுடீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,


ஏதாவது ஒன்று நடந்தால் பாராளுமன்றத்தை அதை அரங்கமாகப்பயன்படுத்தி பிரபல்யமாகப் பேசி பெரும் தேசியவாதக் கொள்iயுடைவர்கள் இருப்பவர்கள் உள்ளார்கள்.  மூன்று தினங்களில் பத்திரிகைகளில் பெரும் பரபரப்பு செய்திகள் வந்தன. அது அண்டைய நாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் பயங்கரவாதத்திற்குத் தயார் ஆகின்றார்கள் என்ற ஒரு செய்தி.  இது மிகவுப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விசயம்.  இதனுடைய பின்னணியைப் பற்றி பத்திரிகையில் வரும் போதுதான்  எமக்குத் தெரியும். ஏனென்றால் உயிர்த்த ஞாயிறு சம்பவம்  நடந்தது அப்படித்தான்.   பின்புதான்  நாங்கள் கண்டோம்.  இதற்குப் பின்னால் ஒரு விசமம் இருக்கிறது என்பதைத் தேடிப் பார்ப்பதும் இல்லை.


இது தொடர்பில் ஒருவர் முன்னை நாள் நடந்த நிகழ்ச்சி குறித்து மறுநாள் அது தொடர்பில் அக்கு வேறாக ஆணி வேறாக கிட்ட நின்று கண்டமாதரி எடுத்த எடுப்பிலே ஆங்கிலப் பத்திரிகையில் எழுதுகிறார் எனில் அவருக்கு அந்த விசயம் இவ்வாறு எழுதுப்பட வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவருடை எஜமானர்கள் எழுதத் தூண்டி இருக்கிறார்கள். சும்மா அல்ல


உண்மையில் தீவிரவாதம் என்பது எந்த சமுயத்திலும் இருக்கக் கூடாது.  இந்த தீவிர வாதம் இருப்பதாக  பேராசிரியர்  ஒருவர் பத்திரிகையில் எழுதியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு  ஒருவர் புத்தகம் எழுதினார்.  அவர் ஓர் உண்மையான பேராசிரியர். அவர் கணிதப் பேராசிரியர். பேராசிரியர் ராஜன் ஹ{ல். மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு புத்தகம். இந்தப் பின்னணியைக் குறித்து இன்னும் இந்தத் தடுமாற்றத்தில் இருக்கின்ற இலங்கையருக்கு   உண்மை சொல்லப்பட வேண்டும் என்பதற்காக  இதிலுள்ள பின்னணியை ஆய்வு செய்கிற போது மிகத் தெளிவாக  அவர்  நூலில் குறிப்பிட்டுள்ளார். 


இதன் பின்னணியில் நிச்சயமாக உளவுத் துறையினுருடைய  பெரும் சதி அரங்கேறி இருக்கிறது. இதைத் தான் கிறிஸ்தவருடைய பேராயர் கார்டினல் ரஞ்ஜித் மல்கம் அடிக்கடி பேசுகிறார். உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். உண்மையை மறைக்கின்றீர்கள் என்று சொல்லுகிறார். ஆனால் இன்னுமின்னும் இந்த விசயங்கள் பூதாகரமாக மாறிக் கொண்டு செல்லுகின்றது. திடீரென்று இலங்கையில் இருந்து வரும் பயங்கரவாதிகள் எங்கேயாவது பக்கத்தில் தேர்தல் நடக்கும் போதுதான் வருவார்கள். இது என்னவென்று விளங்குவதில்லை.  தேர்தல் காலத்தில் மழை காலத்தில் வரும் காளான்கள்  முளைப்பதைப் போன்று தேர்தல் காலத்தில் காலான் முளைக்கிற விசயத்தை திடீரென்று கண்டு பிடிப்பார்கள். 


நேற்று சக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் .இந்த நான்கு பேரின் கைது தொடர்பில்  அவருக்கும் இது பற்றி கவலையாகும்.  அவர் கொழும்பு மத்தியின் பாராளுமன்ற உறுப்பினர். அவர் என்னிடம் வந்து கைது செய்யப்பட்ட நான்கு பேருடைய பின்னணியைப் பற்றி சுட்டிக் காட்டினார். இவர்கள்தான் வாப்பா உம்மா, அவர்கள் இருப்பது மாளிகாவத்தையாகும். எந்த இடம்.  இன்னென்ன ஆட்கள் என்று அவர் அங்கு கைது செய்யப்பட்டவர்களுடைய பின்னணியைச் சொன்னார். 


அப்பொழுது எமக்கு  நன்கு விளங்கி விட்டது. ஆனாலும் அவர்களுக்கும்  பயங்கரவாதத்ததிற்கும்   பின்னணி இருக்கிறதோ இல்லையோ என்று நான் தீர்ப்புச் சொல்ல வரவில்லை. ஆனால் நிச்சயமாக இலகுவாக எதற்குப் பாவிக்கப்பட கூடியவர்கள். அப்பாவிகளையும் இன்றைக்கு பயங்கரவாதிகளாக ஆக்கி விடலாம். அப்படியான சட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சொல்வது வேறு ஒரு காரணம். ஒன்றும் இல்லை. பயங்கரவாதத தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது இந்த நாட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால் அந்த தடைச் சட்டம் வந்ததால் அந்தப் பயங்கரவாதம் அழிய வில்லை.  பயங்கரவாதம் வளர்ந்ததுதான் கூட.  சும்மா இருந்த அப்பாவிகளை அடைத்ததுதான் கூட என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.