Header Ads



கழுதைவியல் கற்கை நெறி


இது மனிதத்தை கழட்டி வைத்துவிட்டு கழுதைத்தனத்தை உடுத்துக்கொள்ளும் ஒரு கற்கை நெறி!


இது பல்கலைக்கழகஙங்களில் கல்லூரிகளில், கற்பிக்கப்படடும் ஒரு கற்கை நெறியன்று!


இது மனிதனி, தனக்குள் இருக்கும் கழுதையை தட்டியெழுப்பி கற்றுக்கொள்ளப்படும் ஒரு கபடக் கலை. பெதுநலனை தூக்கியெறிந்துவிட்டு தன்னலம் என்ற சாக்கடையில் மூழ்கிப் படிக்கப்படும் ஒரு பாதகப்படிப்பு!


இதில் பல்கலைக்கழக பேராசிரியர் தொட்டு பாதை கூட்டும் தொழிலாளி வரை அனைத்து தரப்பினரும் படித்து தேர்ச்சி பெறுகின்றனர். 


இதில் மதபோதகனும் தேர்ச்சி பெற்றிருப்பார். நாத்திகனும் தேர்ச்சி பெற்றிருப்பான். பொறியாளனும் தேர்ச்சி பெற்றிருப்பான். கொல்லனும் தேர்ச்சி பெற்றிருப்பான். 


ஒருவர் வாட்டசாட்டமாக ஆடை அணிந்திருப்பார்! ஆனால் கழுதைவியல் கற்கை நெறியை கரை போக கற்றிருப்பார்!


இன்னொருவன் கிழிந்த ஆடை அணிந்திருப்பான், ஆனால் கழுதைவியல் கற்கையில் வித்தகனாக இருப்பான். 


படித்தவனும், படிக்காதவனும் படித்துக்கொண்ட ஒரு துறைதான் கழுதைவியல் கற்கை நெறி!


🔴 ஒரு ஆண் கை நீட்டி அல்லது கையிரு நீட்டி சீதனம் வாங்கினால் அவன் கழுதைவியல் கற்றகை நெறி படித்தவன். 


🟠 ஒரு தந்தை தன் மகளை அதிக பணமுளள் ஒரு இடத்துக்கு விற்று திருமணம் செய்து வைத்தால் அவன் கழுதைவியல் கற்கை நெறி படித்தவன். 


🟡 ஒரு வீட்டில் மணப்பெண்ணாக வந்தவளை பணிப்பெண்ணாக, அல்லது கட்டில் பண்டமாக, அல்லது பிள்ளை பெறும் மஷினாக மாத்திரம் பார்க்கப்படுமானால் அங்கே கழுதைவியல் கற்கை நெறி படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். 


🟢 ஒரு பேராசிரியர், சில டாலர்களுக்காக ஒரு மாணவனுக்கு முதுகலை பட்டத்துக்கு ஒப்பமிடுவாரானால் அவர் கழுதைவியல் கற்கை நெறியும் சேர்த்து படித்திருக்கிறார் என்று அர்த்தம். 


🔵 ஒரு அரச அதிகாரி, தன் கண் சாடையால் தன் சட்டை பையை காட்டினால் அவர் கழுதைவியல் கற்கை நெறி படித்தவன் என்று அர்த்தம். 


🟣 ஒரு சகோதரன் தன் சோகரியின் வாரிசுரிமைச் சொத்தில் உண்டு கொண்டிருந்தால் அவன் கழுதைவியல் கற்கை நெறி படித்தவன். 


🟤 ஒரு கடைக்காரன் மல்லிகை பொருட்களின் காலாவதி தேதியை மாற்றம் செய்து விற்பனை செய்தால் அவன் கழுதைவியல் கற்கை நெறி படித்தவன். 


🔴 ஒரு மருத்துவர், சில ரூபாய் கமிஷன்களுக்காக குறித்த ஒரு கம்பெனியின் மருந்தை நோயாளிக்கு எழுதிக்கொடுத்தால் அவன் கழுதைவியல் கற்கை நெறியும் படித்தவன். 


⚫ ஒரு இன்ஜீனியர், ஒப்பந்தக்காரனுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளும் போது இருவரும் படித் கழுதைவியல் கற்கையை அமுல்படுத்துகின்றனர். 


🔵 ஒரு நாட்டில் சிறுபான்மை நசுக்கப்படும் போது பெரும்பான்மை கைகட்டி பார்த்துக்கொண்டிருந்தால் அங்கே கழுதைவியல் கற்கை கை கட்டி பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். 


🟡 உள்ளதை மறைத்து இல்லாததை ஊடகங்கள் ஊத்தும்போது கழுதைவியல் கற்கை நெறியில் தேர்ச்சி பெற்ற ஊடகங்கள் என்றுதான் அர்த்தம்.


🟢 இடைத்தரகர் இல்லாமல் வேலை கிடைப்பதில்லை என்றால், ​​குறுக்கு வழியில் சென்று தொழில் தேடுவதென்றால் அங்கே கழுதைவியல் கற்கை நெறி ஆக்கிரமித்துள்ளது என்று அர்த்தம்.


✍ தமிழாக்கம் / imran farook

1 comment:

  1. விறுவிறுப்பான சிந்தனைப் போக்கு. ஆம், இலங்கையின் அரசாங்கமும், அதன் மக்களில் பெரும்பாலானவர்களும் கழுதையியல் கற்கை நெறியைத் துறை போகக்கற்றவர்கள் என்பது பல்வேறு அனுபவங்களூடான நன்றாகத் தெரிகின்றது. அதிலும் விசேடம் என்னவென்றால் பொதுமக்களின் நலனுக்காக நாம் பாடுபடுகின்றோம் என தொண்டை கிழியக் கத்தும் அரசியல் வாதிகள் இந்த கழுதையியல் கற்கையில் மிகவும் ஆழமாக துறைபோகக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்பது அவர்களுடைய நடத்தையில் தௌிவாகத் தெரிகின்றது. இந்தப் போக்கு முற்றாக மாறாதவரை இந்த நாட்டுக்கு அழிவும் இழிவும் தான் எஞ்சியிருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.