Header Ads



இந்த வாசகம் என்றும், உங்கள் ஞாபகத்தில் இருக்கட்டும்..


யாராலும் இவ்வாழ்வில் அனைத்து துறைகளிலும் உச்சத்தை  தொட்டிட முடியாது! 🤔


உங்களிடம் ஒரு சொகுசு கார் இருந்தால் அங்கே ஒருவன் ஒரு சொகுசுக் கப்பலை  வைத்திருப்பான். 


நீங்கள் ஒரு அரண்மனையை வைத்திருந்தால், அங்கே ஒருவன் ஒரு தீவை சொந்தமாக வைத்திருப்பான். 


நீங்கள் உலக மகா பணக்காரனாக இருந்தால், அங்கே ஒருவன் உங்களை விட அந்தஸ்திலும் அறிவிலும் உயர்ந்திருப்பான், உங்களிடம் இல்லாத ஆற்றல்களை பெற்றிருப்பான். 


மண்ணின் மைந்தன் எல்லைகள் வரையறுக்கப்பட்ட ஒரு அற்பமான சீவன்.  குறுகிய வட்டம் கொடுக்கப்பட்வன். 


அவனால் ஒருபோதும் "நான் தான் எல்லாமே" என்று ஆக முடியாது!


மனிதனின் நிஜமான மதிப்பு, அவனை பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் இருக்கப் போவதில்லை. மாறாக அவனது போதுமென்ற மனதிலூம் தன்னால் சாதிக்கலாம் என்ற உணர்விலும் தான் உள்ளது. 


நீங்கள் கட்டாயம் ஒப்பிட்டுத்தான் பார்க்க வேண்டுமானால், உங்கள் கடந்த காலத்தோடு உங்கள் தற்போதைய நிலையை ஒப்பீடு செய்து பாருங்கள். நீங்கள் உண்மையில் முன்னேற்றம் கண்டுள்ளீர்களா? அல்லது பின்னடைவை கண்டுள்ளீர்களா என்பதை தெரிந்து கொள்வீர்கள். 


நீங்கள் உங்கள் சுயத்துடன் போட்டி போட்டுக்கொள்ளப் பழகுங்கள். சுய மரியதையோடு வாழ வேண்டுமெனில், நீங்கள் சாதித்த அனைத்தையும் எப்பொழுதும் நினைவூட்டிக்கொள்ளுங்கள். 


மனிதர்கள் என்ற அடிப்படையில் நமது மதிப்பும் மகிமையும் எமது மன முதிர்ச்சியிலும், நாம் சாதிக்கும் தார்மீக சாதனைகளிலும் தான் தங்கியுள்ளன. நாம் சேமித்த பணத்திலோ அல்லது நாம் வாங்கிய பொருட்களின் விலைகளிலோ அல்ல!


கலீல் ஜிப்ரானின் இந்த வாசகம் என்றும் உங்கள் ஞாபகத்தில் இருக்கட்டும்;


'ஒரு போதும் உங்கள் சுய மதிப்பை விட, நீங்கள் அணியும் ஆடை ஆபரணங்கள் விலைமதிப்பானதாக இருக்கும் நிலைக்கு  ஆக்காதீர்கள்."


✍ சரீஃப் அரபா 

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.