Header Ads



இடைவெளி விடும் கலை


இடைவெளி விடும் கலை

➖  ➖  ➖  ➖  ➖  ➖  ➖ ➖

🌹 உங்கள் கண்களுக்கு அழகானவைகள் என்றும் அழகாகவே தெரிய, இடைவெளி விடும் கலையை பேணி வாருங்கள்!


🌹 நாம் எழுதப் பழகிய போதே சொற்களுக்கிடையில் இடைவெளி விட கற்றுக் கொண்டோம் தானே! அது நம் எழுத்தை மற்றவர்கள் இலகுவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக...நாம் வாகனம் ஓட்டும் போது முன்னால் உள்ள வாகனத்துக்கிடையில் 2 மீட்டர் இடைவெளி விடும் படி டிராஃபிக் விதிமுறைகள் எமக்கு கற்றுத் தந்தது தானே! அது நாம் அதனுடன் முட்டி மோதாமல் இருப்பதற்காக...


🌹 கடலுக்கு நடுவில் சென்று மூழ்குவதை விட தூரத்தில் இருந்து ரசிப்பது அழகுதான்.  கவிஞர்கள் போற்றிப் புகழும் நிலவில் காலடி வைத்துப் பார்த்தால் கற்களும் கரடுமுரடான மேடுகளும் பள்ளங்களும்தான் இருக்கும். ஒளிரும் விளக்கை அன்மித்துச் செல்லும் பூச்சிகள் எரிந்து கருகுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்!


🌹 பாசத்திலும் நேசத்திலும் கூட இடைவெளி பேணுங்கள்... அன்பென்பது  இடைவெளிகளுக்கு இடையில் பிரகாசிக்கும் ஒளி விளக்குதான். அளவுக்கதிகம் நெருங்கிச் சென்று  பேரவாவை அணைத்து விடாதீர்கள்.  அளவுக்கதிகம் தூர விலகிச் சென்று  விளக்கை ஒளிமங்கச் செய்யாதீர்கள். 


🌹 உணர் என்ற நம் விறகுகளை ஒரேயடியாக எம் அன்புக்குரியவர்களின் அடுப்பில் தூக்கிப் போடக்கூடாது.  தூரமாக நின்றபடி விறகுகளை அசைத்து  அடுப்பு பற்றி எரிய துணை நிக்க வேண்டும். நமக்கு எரிகாயம் ஏற்படாமல், சுவையான சமையல் கிடைக்க வேண்டுமெனில் இந்த இடைவெளியை நாம் பேணித்தான் ஆக வேண்டும். 


🌹 அன்புக்காக நீங்கள் ஏங்கி நிற்பவர்கள் மீது நீண்ட பாச முற்றுகையை ஏற்படுத்தி பாசத் தொல்லை கொடுக்காதீர்கள். பாசத்தில் விரிசல் ஏற்பட காரணம் அமைக்காதீர்கள். 


🌹 நீங்கள் புகைப்படம் பிடிக்கும் கேமராவில் உள்ள ஸூம் செயலியை அவதானித்திருப்பீர்கள். அளவுக்கதிகம் ஸூம் செய்வதால் படத்தின் பொழிப்பு மறைந்து போகும். அளவுக்கதிகம் தொலைவில் இருந்து படம் பிடிப்பதால் படத்தின் அழகையும் இரசனையையும் காண முடியாமல் போகும். 


🌹 நாம் வாழ்வில் முட்டாமல் மோதாமல் இருக்க வாழ்க்கை ஓடம் நமக்கு இடைவெளி விடும் பாடத்தை பல இடங்களில் கற்றுத் தருகிறது.


🌹 ஆதலால் பற்றி எரியும் அளவுக்கு கிட்ட நெருங்கி விடாதீர்கள். சூடாரி வீணாகிப் போகும் வரை தூர விலகிச் செல்லாதீர்கள். 


 🌹 நீங்களும் மற்றவர்கள் பேணும் இடைவெளியை மதித்து நடக்கப் பழகுங்கள். 


🌹 நன்றாக நினைவில் கொள்ளுங்கள்! உங்கள் கண்களுக்கு எதுவெல்லாம் அழகாக தெரிகிறதோ, அவைகளிடம் கிட்ட நெருங்காமல் இடைவெளி விட்டே ரசியுங்கள்!


🌹 இடைவெளி விடும் கலையில் விற்பன்னனாகவும் விவரமானவனாகவும் இருக்கும் வரை உங்கள்  வாழ்க்கை சிறக்கும்.

https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2


✍ அப்துர்ரஹ்மான் ராமழான் 

✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.