அக்குறணை ஸியா வைத்தியசாலையின் அவசர சிகிக்கைப் பிரிவுக்கு நவீன வசதிகளைக் கொண்ட கட்டில்
கண்டி மாவட்டப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் கொரோனா செயலணி அமைப்பினால் அக்குறணை ஸியா மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிக்கைப் பிரிவுக்கு நவீன வசதிகளைக் கொண்ட கட்டிலை வழங்கி வைக்கும் வைபவம் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாவட்டப் பணிப்பாளர் நிமல் விஜயசிரி தலைமையில் நேற்று இடம்பெற்றது. அங்கு நன்றி தெரித்து உரையாற்றிய வைத்தியப் பணிப்பாளர் நிமல் விஜயசிரி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
கண்டி மாவட்டப் பள்ளிவாசல் சமேளனத்தின் தலைவர் கே. ஆர். சீத்தீக் தலைமையிலான குழுவினர் ஸியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் நிமல் விஜயசிரி மற்றும் வைத்தியாலையின் சுகாதார அதிகாரி ஆகியோர்களிடம் கட்டிலை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். இதன் போது பள்ளிவாசல் சம்மேளனத்தின் உறுப்பினர்கள். கொரோனா செயலணி அமைப்பின் உறுப்பினர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் இஸ்மாயீல் முன்னாள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் ரமீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட அமைப்பாளர் வஹாப் மாஸ்டர், ரூமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,
இவ் வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் மக்கள் மருந்து எடுப்பதற்காக வருபவர்கள் குளிர் ஊட்டப் பட்ட இடத்தில் இருந்து மருந்தைப் பெற்றுச் செல்வதற்காக அப்பிரிவு முற்றாக குளிரூட்டப்பட்டுள்ளது. இந்த சேவையை ஊர் மக்களே செய்து தந்துள்ளனர். மேலும் வீட்டில் வைத்துப் பார்க்க முடியாத எந்தவொரு நோயாளியாக இருந்தாலும் அவர்களை வைத்தியசாலைக் கொண்டு வந்து நன்கு பராமரிக்கக் கூடிய வாட் வசதி ஒன்று தனியார்களினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இவ் வைத்தியசாலையானர் பல்வேறு வளங்களுடன் இயங்கி வருகின்றன.
ஸியா வைத்தியசாலை பாக்கிஸ்தான் நாட்டின் பிரதமர் அவர்களின் நாமத்தில் பெயரில் அமைந்துள்ள வைத்தியசாலையாகும். இப்பாடசாலையை அபிவிருத்தி செய்வதில். அரசாங்கமும், ஊர் மக்களும் நலன் விரும்பிகளும் , சமூக அமைப்புக்களும் பெரும் பங்களிப்பு ஆற்றி வருகின்றார்கள். எனவே அந்த வகையில் கண்டி மாவட்டப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஊடாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நவீன படிக்கையினைக் கொண்ட கட்டில் வழங்கியுள்ளார்கள். மேலும் அவர்கள் எமது வேண்டுகோளுக்கு இணங்க மேலும் இரு கட்டில்கள் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
05-05-2024
Post a Comment