Header Ads



இளைஞர்களே, போலி முகவர்களிடம் ஏமாறாதீர்கள்


ருமேனியாவில் வேலை வாய்ப்பை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்ட நீர்கொழும்பு பகுதியில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் முன்பாக நேற்று (12) பதற்றமான சூழல் ஏற்பட்டது.


128 இளைஞர்கள் தலா 7 முதல் 10 இலட்சம் ரூபா வரை பணம் இந்த வேலை வாய்ப்பிற்காக பணம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


இவர்கள் அனைவரும் நேற்று வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கு முன்பாக திரண்டனர்.


அங்கு அவர்கள் ஊடகங்ளிடம் கருத்து தெரிவிக்கையில்


“நான் வாத்துவையில் இருந்து வந்தேன்.. ருமேனியா செல்வதற்காக 7.45 லட்சம் ரூபாய் கொடுத்தேன். இதேபோன்று 120 பேர் இங்கே வந்துள்ளனர். நாளை நேர்முகத்தேர்வுக்கான திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று அழைத்து அனைத்தும் இரத்து செய்யப்பட்டதாக கூறினர். ஒரு பாரிய மோசடியாகும்" என்றனர்.

No comments

Powered by Blogger.