அக்குறணையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
- இக்பால் அலி -
அக்குறணை பிரதேச சபையினால் கடந்த நான்கு வருடமாக பாதைகள் செப்பனிடப்படாமலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படாலும் புறக்கணிகக்ப்பட்டு வருதாக சுட்டிக் காட்டி அக்குறணை நகரில் ஜும்ஆத் தொழுகையை அடுத்து ஆர்ப்பட்டம் இடம்பெற்றது.
நீர் வழங்கல் வேலைத் திட்டத்திற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன் வெட்டப்பட்ட பட்ட பாதைகள் இன்னும் செப்பனிடாமல் இருப்பதாகவும் கழிவுகள் சீராமன முறையில் முன்னெடுக்ப்படாமலும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பட்டு வருவதைக் கண்டித்து அக்குறணைப் பிரதேச மக்கள் பதாதைகளை ஏந்திக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்குறணை பிரதேச சபைக்கு அதிகளவிலான வரிப்பணம் அக்குறணை நகரில் இருந்து அறவிடப்பட்ட போதிலும் அபிவிருத்தியின் போது அக்குறணை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பிரதேச மக்கள் அனைவரும் கையொப்பமிட்டு பிரதேச சபையின் செயலாளரிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.
Post a Comment