இந்த உயிரினம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?
நீர் கரடி-பாசிப் பன்றிக்குட்டி- மெதுநடையன்
என பற்பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்படும் இது, ஒரு மில்லிமீட்டர் மாத்திரமே நீளமுள்ள எட்டு கால்கள் கொண்ட ஒரு நுண்ணிய நீர் வாழ் விலங்காகும்.
நமது பூமிப் பந்தில் இதுவரை கண்ட மிக வலிமை மிக்க உயிரினம் இதுவாகும்.
வியப்புக்குரிய இந்த உயிரினம் 10 ஆண்டுகளுக்கு மேலாக உணவு அல்லது தண்ணீர் எதுவுமில்லாமல் உயிர் வாழ வல்லது.
அது மட்டுமா...! நீங்கள் இதனை பற்றி எரியும் ஒரு எரிமலைக்குள் வீசினால், அல்லது -273 C வரை குளிருள்ள ஒரு இடத்தில் அடைத்து வைத்தாலும் அதற்கு
கிஞ்சித்தேனும் பாதிப்பு ஏற்படாது. அது அதன் பாட்டில் சுக வாழ்வு வாழும்.
நில்லுங்கள்...! விஞ்ஞானிகள் இதனைப் பிடித்து ஆக்சிஜனே இல்லாத விண்வெளிக்கு அனுபிப்பார்த்துள்ளனர். அது நல்லபடியாக திரும்பி வந்துள்ளது. மிகக் கொடிய காமா கதிர்களையே தாங்கும் இது 200 ஆண்டுகள் வரை உயிர் வாழும் வல்லமை கொண்டது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment