நாமல் ராஜபக்ஷ இன்னும் காத்திருக்க வேண்டும்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி இதுவரை தமது கட்சியின் ஆதரவை கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்னும் காலம் காத்திருக்க வேண்டும் என்றார்.
Post a Comment