அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் உணவு சமைத்து பாராட்டு பெற்ற இலங்கையர்
மேற்கு அவுஸ்திரேலியா – பெர்த்தை சேர்ந்த போட்டியாளரான தர்ஷ் கிளார்க், சமீபத்தில் தனது இலங்கை பாரம்பரியத்தை, உலகப்புகழ்பெற்ற ‘MasterChef Australia’ நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
இலங்கை வம்சாவளியான அவர், பாஸ்மதி சாதம் மற்றும் தயிர் ரைதாவுடன் கத்தரிக்காய் கறி தயாரித்து நிகழ்ச்சியில் நடுவர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தினார்.
அவர் தனது பாரம்பரியத்தை முன்னராக புறக்கணித்திருந்ததாகவும், ஆனால் இப்போது அதை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். நிகழ்ச்சியின் நடுவர் போ லிங் இயோவ் அவரைப் பாராட்டியதுடன், மக்கள் தங்கள் பாரம்பரிய வேர்களை மீண்டும் இணைக்க உதவுவதில் நிகழ்ச்சியின் பங்கையும் சுட்டிக்காட்டினார்.
தனது பாரம்பரிய உணவான ‘பாற்சோறு’ மூலம் ஈர்க்கப்பட்டசாவிந்திரி பெரேராவைத் தொடர்ந்து, இந்த சீசனில் தர்ஷ் கிளார்க் இரண்டாவது இலங்கை வம்சாவளி போட்டியாளர் ஆவார்.
Post a Comment