இஸ்ரேலிய இராணுவத் தளத்தில் பாரிய தீ, இராணுவ தளபாடங்கள் நாசம்
இஸ்ரேலின் டெல் அவிவ் இல் உள்ள முக்கிய இராணுவத் தளத்தில் பாரிய தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல் அவிவ் - ஹாஷோமர் இராணுவ தளத்தில் உள்ள கிடங்கு வளாகத்திலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு இராணுவ தளபாடங்கள் தீப்பரவலில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
28 தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றதாக அந்நாட்டின் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தீக்கனா காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
Post a Comment