பாலஸ்தீனத்தில் படுகொலைகளால் இன்று, இரத்த ஆறு ஓடுகிறது
போரினால் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்மொழியப்பட்டு, இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் வழிமொழியப்பட்ட யோசனை மீதான விவாதம் இன்று இலங்கையின் நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதில் பேச்சாளராக பங்கேற்ற மகிந்த ராஜபக்ச, காசா பூமியில் நாள்தோறும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இடிபாடுகளுக்குள் இருந்து சிறுவர்,சிறுமிகள் மீட்கப்படும் காட்சிகளை பார்க்கக்கூயதாக இருக்கிறது. காசா பகுதியில்; இன்று 1.2 மில்லியன் பட்டினி நிலைக்கு உள்ளாகியுள்ளனர்
தெற்கு காசா பகுதியில் இருந்து பல லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். உலக தலைவர்கள் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வைக்காணவேண்டும்.
புனித பூமியான பாலஸ்தீனத்தில் படுகொலைகளால் இன்று இரத்த ஆறு ஓடுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment