Header Ads



முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி


கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி,  மினுவங்கொடை கல்வி வலயத்தின் அல்ஹமான் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் தமிழ் மொழி மூல பரீட்சையில் தோற்றிய 14 மாணவர்களுக்கு புவியியல் பாடத்தின் முதலாவது வினாத்தாள் மற்றும் வரைப்பட பகுதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


அதேபோல், இரணடு விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பரீட்சை மேற்பார்வையாளர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


நேற்று நிறைவடைந்த சாதாரண தரப் பரீட்சையில் பிழைகள் காணப்பட்டதாகவும் மற்றும் பரீடசை நிலையங்கள் சிலவற்றில் மோசடிகள் இடம்பெற்றதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.