Header Ads



காசா தாக்குதலை நிறுத்த ஹக்கீம் கூறிய யோசனை - அரசாங்கம் வழங்கிய உடனடி பதில்




காஸா மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்தத் தவறினால், இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை முறிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பி ரவூப் ஹக்கீம் இன்று -14- வலியுறுத்தியுள்ளார். 


"இஸ்ரேலை அச்சுறுத்தி, காஸா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இலங்கை இராஜதந்திர உறவுகளை விலக்கிக்கொள்ளும் என்று தெரிவிக்கவும். கடைசி முயற்சியாக இதை செய்யுங்கள்" என்று ஹக்கீம் பாராளுமன்றத்தில் கூறினார். 


இதற்குப் பதிலளித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய "அனைத்து நாடுகளுடனும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும், பேணுவதும்தான் எங்களின் வெளியுறவுக் கொள்கை. இருப்பினும், பலஸ்தீனத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம் என்று அர்த்தமில்லை" என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.