Header Ads



ஜனாதிபதி ஆணைக்குழு முன் கோரிக்கைகளை முன்வைத்த புத்தளம் வாழ் யாழ். கிளிநொச்சி சிவில் சம்மேளனம்


ஜனாதிபதியினால் புதிதாக உத்தேச கட்டமைப்பு ஆணைக்குழுவின் புத்தள மக்கள் சந்திப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று 14/05/2024 புத்தள பிரதேச செயலகத்தில் நடை பெற்றது. 


இதன்போது இடம்பெயர்க்கப்பட்ட வடபுல மக்கள் பிரதிநிதிகள். சமூக ஆர்வலர்கள், பல அமைப்புக்கள் சார்பாகவும் கலந்து தத்தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தார்கள். 


இதன்போது புத்தளம் வாழ் யாழ். கிளிநொச்சி இடம்பெயர்க்கப்பட்ட சிவில் சம்மேளனம் சார்பாக தலைவர் அப்துல் மாலிக் மெளலவியும், செயலாளர் ஹஸன் பைறூஸ் ஆசிரியர் அவர்களும்  புத்தளம் வாழ் சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான வீட்டுப் பிரச்சினை கல்வி. சுகாதாரம். வாழ்வாதார பிரச்சினைகளும்  அதற்கான தீர்வுத்திட்ட ஆலோசனைகளையும் இழப்பீடுகளுக்கான முன்மொழிவுகளும் கருத்தியல் விடயங்களையும் முன்வைத்து ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.


இதில்ஜனாலிபதி செயலணியின் சிரேஷ்ட செயலாளர் ரஞ்சித் அழககோன் இணைப்பாளர் கொடித்துவக்கு. பேராசிரியர் தங்கராசா. புத்தள பிரதேச செயலாளர் உட்பட பல கல்விமான்களும் புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர். விஷேடமாக இடம்பெயர்க்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் எம்மவர்களும் எமக்கான முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் தனியாகவும் அமைப்பு ரீதியாகவும் முன்வைக்க முடியும் என்ற கருத்தையும் முன்வைத்தார்கள். 


எனவே உரியவர்கள் தங்களது விடயங்களை மேற்குறித்த முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டிக்கொண்டார்கள்.



No comments

Powered by Blogger.