பிரபாகரனுக்கு முதல்தடவையாக, அஞ்சலி நிகழ்வு - சகோதரர் மனோகரன்
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ஆம் திகதி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் தந்தி டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை இராணுவம் அறிவித்தது.
பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ஆம் திகதி நடத்த உள்ளோம்.
பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலேயே வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது.
பிரபாகரன் பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படுகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரை பிரபாகரனுக்கோ, அவரது குடும்பத்துக்கோ வீர வணக்கம் செலுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment