Header Ads



ஈரான் ஜனாதிபதியை வெற்றிலை கொடுத்து, வரவேற்ற சிறுவனின் கண்ணீர்


உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்தபோது சிறுவன் ஒருவனை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.


அதாவது நாட்டு வந்த ஈரான் ஜனாதிபதியை இப்ராகிம் ரைசி  வரவேற்ற சிறுவன் , தற்போது அவரது நினவுகளை நினைத்து கண்னீர் வடித்துள்ளான்.


நான் வெற்றிலை கொடுத்து அவரை வரவேற்றேன் என்னை அவர் கட்டி அணைத்தார் முத்தமும் இட்டார் இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் அந்த அபூர்வமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது அவருடைய மொழியில் என்னென்னவோ கூறினார்.


எனக்கு அவரது மொழி புரியாதபோதும் அவர் என்னை பாராட்டுவது புரிந்தது, அந்தத் தலைவரின்இப்ராகிம் ரைசி  மரணச்செய்தி பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தவுடன் எனக்கு கூறப்பட்டது.


மகன் நீங்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்ற அந்த ஜனாதிபதி, விபத்தில் மரணித்து விட்டாராம் என்று எனக்கு வீட்டில் கூறப்பட்டது அப்போது என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.


நான் அப்போது கண்ணீர் விட்டு அழுதேன் என ஈரான் ஜனாதிபதியை வெற்றிலை வைத்து வரவேற்ற எம்பிலிப்பிட்டிய போதிராஜ மகா வித்தியாலய மாணவன் 11 வயதான கய்து கித்ன ஊடகங்களுக்கு கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.