Header Ads



எமது தரப்பினர் பணத்துக்காக விலைபோக மாட்டனர் - சஜித்


நாட்டின் பல பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், வாய்ச்சாடல் தலைவர்கள் தமது கட்சிக்கு கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் சேறுபூசும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான அரசியல் விளையாட்டுக்களுக்கு அடிமைகளாக மாற வேண்டாம். இவ்வாறு ஒரு முறை அடிமைகளாக மாறியமையினாலயே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஆட்சியாளர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கி, தேர்தல் நெருங்கி விட்டதால் பணம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் வைத்துக் கொள்ள செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெறும் போது மக்களுக்கு நேர்ந்தது எதுவுமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 183 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மொனராகலை, மடுல்ல, கல்கமுவ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 12 ஆம் திகதி இடம்பெற்றது.


இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.


ஏனைய கட்சிக்காரர்கள் பணத்திற்கு விலைபோனாலும், தனது கட்சிக்காரர்கள் பணத்திற்காக விலைபோகமாட்டனர். சலுகைகள், வரப்பிரசாதங்களுக்கு அடிமைப்பட்டு, கோடிக்கணக்கான நிதியை கையகப்படுத்தாது ஊழல் மிக்க அரசியல் கலாசாரத்தை முறியடிக்க பாடுபடுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


வங்குரோத்தான நாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பணத்துக்காக அரசியல் செய்யும் கட்சியல்ல. சுகாதாரம் மற்றும் கல்வியை வலுப்படுத்தவே எங்களுக்கு கிடைக்கும் நிதி பயன்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


🟩 மக்கள் சேவையை பணத்துக்கு மட்டுப்படுத்த முடியாது.


பொது மக்கள் சேவையை பணம் கொடுத்து வாங்க முடியாது, அது பணத்தை விட உன்னத விடயம் என்பதால், பணத்தால் தன்னையும் தனது தரப்பையும் விலைபேச முடியாது. கட்சி தாவ மாட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு வழங்கும் பணத்தை பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


🟩 ஏனைய நாடுகளில் Head hunting எமது நாட்டில் Job hunting


கல்வியறிவு சிறந்து விளங்கும் நாடுகளில், சிறந்த திறமையானவர்களை கண்டுபிடித்து, எவ்வாறேனும் அத்தகைய திறமையானவர்களை தமது நிறுவனத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், வர்த்தகர்கள் திறமையான மாணவர்களின் பின்னால் ஓடுகின்றனர். ஆனால் நமது நாட்டில் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலைக்கான வரிசைகளில் காத்திருக்கும் நிலை. Head hunting இந்நாட்டில் ஏற்பட வேண்டும். கல்வி தரமானதாக இருந்தால் வேலைகளை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை என்பதால், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நாட்டில் ஸ்மார்ட் கல்வி இல்லை என்பது அரசியல்வாதிகளின் தவறே தவிர பிள்ளைகளின் தவறல்ல. சிங்களம் மட்டும் தமிழ் மட்டும் என்று சொல்லி வாக்குகளை சுருட்டிக்கொள்ள நடந்து கொள்வது  பிள்ளைகளுக்கு நல்லது பயக்காது. இனவாதம், மதவாதம், மொழிவெறியை தூண்டி தங்கள் வாக்குகளை பெருக்கிக் கொள்ளவே செயற்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்குகளால், இறுதியில் அரசியல்வாதிகளால் இளைய தலைமுறையினரின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.