Header Ads



மோசமான மனித உரிமை மீறல்களை செய்த ரைசிக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது - அமெரிக்கா கண்டிப்பு


விபத்தில் மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்திருந்த நிகழ்வை அமெரிக்கா புறக்கணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஈரானுடன் பல ஆண்டுகளாக கடுமையான மோதலில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல்களை செய்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபை ஈரான் மக்களுடன் நிற்க வேண்டும் எனவும், அவ்வாறான ஒருவரை கௌரவிக்கக் கூடாது எனவும் அமெரிக்கா மேலும் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் சபையின் பாரம்பரியமாக மரணத்தின் போது ஒரு அரச தலைவர் இருக்கும் மக்களுக்காக நடத்தப்படும் இவ்வாறான வைபவத்தில் 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.