மற்றுமொரு மர்ம மரணம் - நீதியைத் தேடும் பெற்றோர்கள்
25 வயதுடைய சாரங்க மதுசார என்ற இளைஞருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி, சாரங்க தனது தாயின் 45வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மெழுகுவர்த்தியை வாங்க வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால் இரவு சீகிரிய பொலிஸாரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து, அந்த இளைஞரின் தாய் தம்புள்ளை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் சாரங்க மதுசார, இதன்போது மர்மமான முறையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் படுகாயமடைந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக படுக்கையில் கிடக்கும் சாரங்க, உண்மையில் எவ்வாறு காயமடைந்தார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
சாரங்க விபத்தில் சிக்கியதாக பெற்றோரிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விபத்து எப்படி நடந்தது? இதற்கு யார் காரணம் என்று இதுவரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சாரங்கவை நோயுற்றுப் படுக்கையில் அமர வைத்த பொறுப்பாளர்கள், சட்டத்தின் முன் மறைந்து வாழும் நிலையில், சாரங்கவுக்கு சிகிச்சை அளிப்பதில் பெற்றோர், பொருளாதார ரீதியில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே, சாரங்கவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உதவியை நாடும் பெற்றோர், தங்கள் மகனின் நோய்க்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்குமாறு சட்ட அமுலாக்க அதிகாரிகளை கோரியுள்ளனர்.
மர்ம மர்மம்?
ReplyDelete