Header Ads



பாராளுமன்றத்தில் ஈரான் ஜனாதிபதிக்கு சஜித் அனுதாபம் தெரிவிப்பு - பிரேரணை கொண்டுவரவும் யோசனை


ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த அனுதாபங்களை சபையில் தெரிவித்தார்.


சில நாட்களுக்கு முன்னர், அசர்பைஜான் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(22) பாராளுமன்றத்தில் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் தெரிவித்தார்.


இந்த திடீர் விபத்து மற்றும் மரணங்கள் குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என்றும், அவரது மறைவு இலங்கைக்கும் எமது ஒட்டு மொத்த பிராந்தியத்திற்கும் பாரிய இழப்பாகும். என்றும், ஈரானும், இலங்கையும் நீண்ட கால நண்பர்கள் என்ற வகையில் இலங்கையின் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகள் பலவற்றுக்கு ஒத்துழைப்பை நல்கியுள்ளது. இவற்றை மறந்து விட முடியாது.


விசேடமாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு ஈரானிய அரசு, ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது. அதேபோல் கலாநிதி இப்ராஹிம் ரைசி மேன்மை தங்கிய ஈரானிய ஜனாதிபதி அவர்கள் அத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். விசேடமாக மிகவும் நெருக்கமான தொடர்பு எமக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த சந்தர்ப்பத்தில்,  மேன்மை தங்கிய ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, அதேபோல் ஈரான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட மரணித்தவர்களுக்கு இஸ்லாமிய நம்பிக்கையின் பிரகாரம் ஜென்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கம் கிட்ட பிரார்த்தித்துக் கொள்கிறேன் என எதிர்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


ஈரான் ஜனாதிபதிக்கு அனுதாபப் பிரேரணையை கொண்டு வரும் யோசனையையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் முன்வைத்தார்.

No comments

Powered by Blogger.