இன்றும் என் நெஞ்சில், தேனாக இனிக்கிறது...
அவளுடனான ஞாபகங்களில், எழுத்துக்களில் கலந்து பார்த்தேன். நமக்கிடையில் நடந்த வாட்ஸ்அப் உரையாடல்களில் உலாவிப்பார்த்தேன்.
சில சமயம் அவைகளில் சிலதை வாசிக்கும் போது என் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை மின்சாரம் தாக்குவது போல் உணர்கிறேன். நான் வேலைப் பளுவில் அளித்த சில பதில்கள் அவ்வளவு திருப்தியானதாக இருந்திருக்காதே' என்பதை இப்போது என்னால் உணர முடிகிறது.
ஆனால் ஒரு வாட்ஸ்அப் பதில் - அது கடைசி வாட்ஸ்அப் உரையாடலும் கூட- இன்றும் என் நெஞ்சில் தேனாக இனிக்கிறது.
அப்போது நான் துருக்கியில் இருந்தேன். அவள் என்னிடம் ஒரு சாதாரண பொருளை கேட்டிருந்தாள். அதனை நான் அனுப்பி வைத்தேன். அவள் எனக்கு நன்றி கூறினாள். அதற்கு நான் அவளிடம்: இது நான் உனக்கு செய்ய வேண்டியதில் மிக சாதாரண ஒன்றுதான். என்னால் முடியுமாக இருந்தால் உன்னை நான் தங்க நிலத்தில் நடக்க வைத்து அழகு பார்ப்போன்" என்று கூறியிருந்தேன்.
இப்போது நான், அவள் மீது குரலை உயர்த்திப் பேசிய ஒவ்வொரு பொழுதையும் நினைத்து வருந்துகிறேன். சில வேளை எனக்குத் தெரியாமலே அவள் மனதை நேவித்த நேரங்களை நினைத்து வருந்துகிறேன்.
✍ கலாநிதி சல்மான் அல்-அவ்தா, மறைந்த தனது மனைவி பற்றி.
Imran Farook
Post a Comment