Header Ads



மாதாந்தச் செலவு பெருமளவு அதிகரிப்பு


இலங்கையில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 டிசம்பர் மாதத்தில் 16.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.


இதன்படி, 103,283 ரூபாவாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார வர்ணனை மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு 88,704 ரூபாவாகவும், 2023 ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு 16.5% அதிகரித்து 103,283 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


இதேவேளை, 2022-2023 ஆம் ஆண்டுகளில், இலங்கையில் ஒரு குடும்பம் உணவு அல்லாத பொருட்களுக்காகச் செய்யும் செலவினம் அதிகரித்துள்ளது.


2022ல், இலங்கையில் ஒரு குடும்பம் செலவிடும் மாதாந்திர நுகர்வுச் செலவில் 53.9% உணவு அல்லாத பொருட்களுக்காக செலவிடப்படுகிறது.


உணவுக்காக செலவிடப்படும் தொகை மாதாந்திர நுகர்வு செலவில் 46.12% ஆகும்.


2023 ஆம் ஆண்டில், இலங்கையில் ஒரு குடும்பம் தனது மாதாந்த நுகர்வுச் செலவில் 56.2% உணவு அல்லாத பொருட்களுக்காகச் செலவிடுவதுடன், 43.8% உணவுக்காகச் செலவிடப்படுகிறது.


2023ல் இலங்கையில் உணவு அல்லாத பொருட்களின் விலை அதிகரிக்கும் போக்கைக் காட்டியது,


எனினும், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், விலை அதிகரிப்பு குறைந்த மட்டத்தில் இருந்ததாக கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

No comments

Powered by Blogger.