Header Ads



தெடிகம என்ற பெயரைப் பயன்படுத்தி, அடகு வியாபாரத்தில் ஈடுபட தடையுத்தரவு


"தெடிகம" என்ற பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் தங்க அடகு வியாபாரத்தில் ஈடுபட்ட  கண்டியில் தனியார் நிறுவனமொன்றுக்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.பெர்னாண்டோ  இன்ற்று (20) தடை உத்தரவு பிறப்பித்தார்.


தெடிகம வர்த்தக முத்திரை போன்ற பெயர்களைப் பயன்படுத்தி நியாயமற்ற போட்டியைத் தடுப்பதற்காக,கண்டி கட்டுகஸ்தோட்டை, குருநாகல் வீதியில் அமைந்துள்ள  டி.ஏ.சி.பி. தெடிகம அடகு நிறுவனத்திற்கு இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டது.


தெடிகம அடகு நிலையம்(Dedigama pawning sentre) தெடிகம தங்கக் கடன் நிலையம் ය(Dedigama gold loan sentre)தெடிகம அடகு தரகர்கள்(Dedigama pawn Brokers) ,  போன்ற பெயர்களுக்கு சமமான பெயர்களைப் பயன்படுத்துதல், தெடிகம வர்த்தக முத்திரையைப் பயன்படுத்துதல், தெடிகம என்ற பெயரில் விளம்பரம் செய்தல், புதிய கடைகளைத் திறத்தல் என்பவற்றைத் தடுக்கும் வகையில்  இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டது.


தெடிகம குரூப் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் தலைவர்  ரஞ்சன் மலின் தெஹனகம ஆகியோர்  புலமைச்சொத்துரிமைச் சட்டத்தின் கீழ்  தாக்கல் செய்த வழக்கை பரிசீலித்ததன் பின்னர், இந்த தடையுத்தரவு விதிக்கப்பட்டது.


சுதத் பெரேரா அசோசியேட்டின் ஆலோசனையின் பிரகாரம்,  மனுதாரர் சார்பில் சட்டத்தரணி மனோஜ் பண்டார  நீதிமன்றில் ஆஜரானார்.  தெடிகம தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நம்பகத்தன்மையையும் நற்பெயரையும்  பயன்படுத்தி பிரதிவாதி மோசடியான வர்த்தகத்தில்   ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.  1950 இல் ஸ்தாபிக்கப்பட்ட தெடிகம குரூப் தனியார் நிறுவனம் இலங்கை முழுவதும் 281 கிளைகளை நிறுவியுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க  புலமைச் சொத்துரிமைச் சட்டத்தின் 144 ஆவது பிரிவின்படி பிரதிவாதி அந்த  பிரபலமான பெயரை மோசடியாகப் பயன்படுத்துவதாகவும், இது சட்ட விரோதமான செயலாகும் எனவும்  அவர் குறிப்பிட்டார்.  எனவே, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற  மனுதாரரின்  நற்பெயரைப் பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க  தடை உத்தரவு  வழங்குமாறும்  அவர் கோரினார்.


மனுதாரர் தரப்பு நியாயத்தை பரிசீலித்த  மேல்நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதி நிறுவனத்திற்கு தடைஉத்தரவு விதித்ததுடன், எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில்  விளக்களிக்குமாறும் பிரதிவாதிக்கு உத்தரவிட்டார்.


மனுதாரர் சார்பில்   சட்டத்தரணி  மனோஜ் பண்டார, சட்டத்தரணி  சமத்காத சில்வா, சட்டத்தரணி  லக்சனி உள்ளிட்ட சட்டத்தரணிகள்   ஆஜராகினர்.

No comments

Powered by Blogger.