பஸ் கட்டணம் குறையுமா..?
டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து பயணக் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து கட்டணங்கள் தொடர்பான தேசிய கொள்கையின் விலை சூத்திரத்தின் அடிப்படையில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் வருடாந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனவே, இந்த வருடத்துக்கான கட்டணத்தை எதிர்வரும் ஜூலை மாதத்தில் மாத்திரமே திருத்த முடியும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment